கீர்த்தி சுரேஷின் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முதல் நாள் வசூல்

சந்துரு இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் நேற்று வெளியானது. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இயக்குநர் ஜே.கே. சந்துரு பல படங்களுக்கு வெற்றித் திரைக்கதைகள் எழுதியவர், ஏற்கெனவே ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்கிற படத்தை இயக்கியவர். ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், ராதிகா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ படம் முதல் நாளில் ரூ 65 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷின் காமெடி புரோமோ வைரலாகி வருகிறது.






