கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளையொட்டி “ரிவால்வர் ரீட்டா” படக்குழு வெளியிட்ட பாடல்

சென்னை,
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.
கடந்த ஆண்டு ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வைரலானது.
தமிழில் கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த ”ரகு தாத்தா” படம் சரியாக போகாததால், ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளையொட்டி ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.