`கிஷ்கிந்தாபுரி' படம்: வில்லன் லுக்கில் மிரட்டும் சாண்டி மாஸ்டர்

பெல்லங்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த ஹாரர்-த்ரில்லர் “கிஷ்கிந்தாபுரி”. கடந்த 12ந் தேதி வெளியான இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் சாண்டி மாஸ்டர், தனிக்கெல்லா பாரணி, ஸ்ரீகாந்த் அய்யங்கார், ஹைப்பர் ஆதி, மக்ரந்த் தேஷ்பாண்டே, சுதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கவுஷிக் பேகல்பட்டி இயக்கிய இந்த படத்தின் டிக்கெட் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், `கிஷ்கிந்தாபுரி’ படத்திலிருந்து நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சாண்டி மாஸ்டர் வித்தியாசமான தோற்றத்தில், வில்லன் லுக்கில் மிரட்டுகிறார். சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திவரும் லோகா படத்திலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் சாண்டி நடித்தது குறிப்பிடத்தக்கது.