கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' படப்பிடிப்பு நிறைவு – திரைக்கு வருவது எப்போது?

சென்னை,
கிறிஸ்டோபர் நோலனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘தி ஒடிஸி’யின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. 2023-ல் வெளியாகி ஆஸ்கர் விருது பெற்ற ‘ஓப்பன்ஹைமர்’ படத்திற்குப் பிறகு கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் படம் ‘தி ஒடிஸி’.
இதில், மேட் டாமன் ஒடிஸியஸாக நடிக்கிறார். மேலும், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா, லூபிடா நியோங்கோ, ராபர்ட் பாட்டின்சன், சார்லிஸ் தெரோன், ஜான் பெர்ன்தால், பென்னி சப்டி, ஜான் லெகுய்சாமோ மற்றும் எலியட் பேஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் துவங்கிய படப்பிடிப்பு சுமார் 164 நாட்களுக்கு பிறகு முடிந்துள்ளது.
தி ஒடிஸி, சுமார் 250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய மிகவும் விலையுயர்ந்த படம் இதுவாகும். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூலை 17 அன்று யுனிவர்சல் பிக்சர்ஸ் மூலம் உலகளவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.