“கிறிஸ்டினா கதிர்வேலன்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

ஶ்ரீ லட்சுமி ட்ரீம் பேக்டரி பேனரில் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தை எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். கும்பகோணம் கல்லூரி பின்னணியில் நடைபெறும் கதையில் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், டி எஸ் ஆர், ஆருள் டி. ஷங்கர், சிலுமிஷம் சிவா, ரவி விஜே, கனா காணும் காலங்கள் புவனேஸ்வரி, சஞ்சய்வர்மன், ஆதித்யா டிவி விக்கி, சத்யா, மைக்கேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ கவுஷிக் ராம் நாயகனாக நடிக்க, ‘கொண்டல்’ மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் இதயங்களோடு இணைந்த பிரதிபா தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார். என். ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்திலிருந்து ‘என்னை விட்டு நீ’ வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் டிரெய்லரை ஜி. வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இப்படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.