கிரைம் திரில்லர் கதையில் உருவாகும் "தி டார்க் ஹெவன்"

சென்னை,
கிரைம் திரில்லர் கதையை மையமாக வைத்து ‘தி டார்க் ஹெவன்’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ‘டி3’ படத்தை இயக்கிய பாலாஜி இயக்கி வருகிறார். படத்தை பற்றி அவர் கூறுகையில், ‘ என் 2-வது படமான இந்த ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தையும் நானே இயக்கித் தயாரிக்கிறேன்.
இந்தப் படம் ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியதாக உள்ளது.கோதை எண்டர்டெயின்மென்ட் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறேன்.
படம் முழுக்க மலைப்பகுதிகளில் நடப்பதால் குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாமல் 3, 4 கிலோமீட்டர் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்த வேண்டும். அங்கே சிரமப்பட்டு படம் எடுத்தோம்.
‘ராஜா ராணி 2’-ல் நடித்த சித்துவை கதாநாயகனாகவும், பிக்பாஸ் தர்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.வேலராமமூர்த்தி, ரித்திகா, அருள் ஜோதி, பிரதீப், ஜெயகுமார் ஜானகிராமன், அஜித் கோஷி போன்றவர்களும் நடிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.