கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிரஞ்சீவி

ஆசிய கோப்பை தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற திலக் வர்மாவை நடிகர் சிரஞ்சீவி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, கேத்ரின் தெரசா உள்ளிட்டோர் நடிப்பில் “மன ஷங்கரா வர பிரசாத் காரு” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா அழைக்கப்பட்டிருந்தார். திலக் வர்மாவுடன் கேக் வெட்டி படக்குழுவினர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். திலக் வர்மாவுக்கு நடிகர் சிரஞ்சீவி சிறப்பு பரிசாக சங்கு ஒன்றை வழங்கினார்.