"கிங்ஸ்டன்" படத்தின் 2-வது பாடல் வெளியானது

சென்னை,
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கிங்ஸ்டன்’. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பேச்சுலர் படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் ‘ராசா ராசா’ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இப்படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘செலிபிரேசன் ஆப் டெத்’ என்ற இந்த�பாடலை கானா பிரான்சிஸ் பாடியுள்ளார்.