“கிங்டம்” ஸ்கிரிப்ட் முதலில் வழங்கப்பட்டது அந்த ஹீரோவுக்கா? – இயக்குனர் விளக்கம் |I will direct Ram Charan someday

சென்னை,
“ஜெர்சி” படத்தின் மூலம் புகழ் பெற்ற கவுதம் தின்னனுரி தற்போது “கிங்டம்” படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் பிரபலமடைந்துள்ளார். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
முன்னதாக இப்படத்தின் ஸ்கிரிப்ட் முதலில் ராம் சரணுக்கு வழங்கப்பட்டதாகவும் ஆனால், ஸ்கிரிப்ட் தனக்கு பொருந்தமாக இல்லை என்று ராம் சரண் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கவுதம் தின்னனுரி இந்த தகவல்களை உறுதியாக மறுத்துள்ளார். கிங்டம் கதை ராம் சரணுக்கு வழங்கப்படவில்லை எனவும், ஆனால் நிச்சயமாக ஒரு நாள் ராம் சரணை இயக்குவேன் என்றும் அவர் கூறினார்.
நடிகர் ஷங்கரின் ”கேம் சேஞ்சர்” படத்திற்கு பிறகு தின்னனுரி, ராம் சரணை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அந்த திட்டம் நிறைவேறவில்லை.