காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இனி யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது – சூர்யா, Kashmir Terror Attack: This should never happen to anyone again

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இனி யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது – சூர்யா, Kashmir Terror Attack: This should never happen to anyone again


ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொடிய தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளயிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இதயத்தை நொறுக்கும், அதிர்ச்சியளிக்கும் செய்தி. இனி யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இந்தியா ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கும். அமைதிக்கான நீடித்த பாதை உருவாகட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *