கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் ‘கல்கி 2898 ஏடி’ இயக்குனர்

சென்னை,
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்தனர்.
இப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானநிலையில், உலகம் முழுவதும் ரூ,1,100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இதனையடுத்து, 2ம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் நாக் அஸ்வின், ஸ்கிரிப்ட் உட்பட அனைத்தும் தயாராக இருப்பதாகவும் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், பிரபாஸ் ஆகியோரின் கால்ஷீட் மொத்தமாகத் தேவைப்படுவதால் அதற்காகக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அடுத்த வருட இறுதிக்குள் படம் வெளியாகும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.