கார் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா: நிகழ்ச்சிகளை தவிர்த்து வரும் ராஷ்மிகா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் ரகசியமாக நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் காரில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயமில்லை என்றாலும், நிச்சயதார்த்தம் நடந்து மூன்று நாட்களில் ஏற்பட்ட இந்த விபத்து சம்பவம் இரு வீட்டார் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ராஷ்மிகா தற்போது விஜய் தேவரகொண்டா வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக எந்த நிகழ்ச்சிகளுக்கும், பட விழாக்களுக்கும் செல்வதை ராஷ்மிகா தவிர்த்து வருகிறாராம். தேவையற்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் ராஷ்மிகா தற்போது வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்று கூறப்படுகிறது.