கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜெஎம் பஷீர்; மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா,
தேவர் திருமகனார் திரைப்பட கதாநாயகன் ஜெஎம் பஷீர். இவர் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். மேலும், திமுக சிறுபான்மை பிரிவில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜெஎம் பஷீர் இன்று மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பஷீரின் கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் பஷீர் காயமடைந்தார். இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






