’கார்மேனி செல்வம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

சென்னை,
இயக்குநர்களாக அறிமுகமாகி, நட்சத்திர நடிகர்களாக உயர்ந்திருக்கும் சமுத்திரக்கனி – கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதையின் நாயகர்களாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘கார்மேனி செல்வம்’. இந்த படத்தினை ராம் சக்ரீ இயக்கியுள்ளார். இதில் லட்சுமி பிரியா சந்திர மவுலி, ரெடின் கிங்ஸ்லி, படவா கோபி, ஹரிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார். தீபாவளி திருநாளை முன்னிட்டு படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தற்போது இப்படத்திலிருந்து கார்மேனி என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஸ்ரேயா ஸ்ரீரங்கா பாடியுள்ளார். பாடல் வரிகளை மணி அமுதவன் எழுதியுள்ளார்.