‘கார்த்தி 29’ படத்தின் புதிய அப்டேட்

‘கார்த்தி 29’ படத்தின் புதிய அப்டேட்


சென்னை,

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. காதல், கமர்ஷியல், ஆக்சன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மெய்யழகன்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடாந்து, நலன் குமாராசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ என்ற படத்திலும், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ‘சார்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது கார்த்தியின் 29-வது படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கார்த்தி 29 படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்க உள்ளதாகவும், கதாநாயகியாகவும் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாகவும் புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் பூஜை நாளை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாக உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *