கார்த்தியின் “வா வாத்தியார்” படத்தின் 2வது பாடல் வெளியானது

கார்த்தியின் “வா வாத்தியார்” படத்தின் 2வது பாடல் வெளியானது


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.

நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ‘வா வாத்தியார்’ படத்தின் 2வது பாடலான ‘ஆலப்பிக்கே உம்மாக் ’ பாடல் வெளியாகியுள்ளது. கெளுத்தி எழுதிய இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார். இப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *