கார்த்தியின் "வா வாத்தியார்" பட டிரெய்லர் வெளியானது

கார்த்தியின் "வா வாத்தியார்" பட டிரெய்லர் வெளியானது


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மெய்யழகன்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான ‘வா வாத்தியார்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் நலன் குமாரசாமி, “சூது கவ்வும், காதலும் கடந்து போகும்” உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

வா வாத்தியார் படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 12ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *