காரை அடகு வைத்து மோசடி – மகனின் நண்பர்கள் மீது துணை நடிகை புகார்|Supporting actress files complaint against son’s friends for car pawning scam

சென்னை,
சென்னையில் தனது காரை மகனின் நண்பர்கள் ஏமாற்றி அடமானம் வைத்து விட்டு, மீட்டுத் தரமால் அலைக்கழிப்பதாக துணை நடிகை மணிமேகலை குற்றம்சாட்டியுள்ளார்.
நண்பன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மணிமேகலை. இவரது மகன் கண்ணனிடம் அவருடைய நண்பர் ரத்தினவேல் பாண்டியன், 6 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிய அவர், தஞ்சாவூரில் மணிமேகலையின் காரை அடமானம் வைத்து மேலும் 5 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டுள்ளார்.
பணத்தையும், காரையும் திருப்பித் தராததால், இதுகுறித்து, ரத்தினவேல் பாண்டியன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மாதவன், ராஜா ஆகியோர் மீது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்திருக்கிறார். ஆனால், ஓராண்டாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மணிமேகலை குற்றம்சாட்டியுள்ளார்.