காயத்ரி நடித்துள்ள ‘காயல்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்

சென்னை,
தமிழில் ’18 வயசு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். அதன்பின், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான மாமனிதன், விக்ரம், மேரி கிறிஸ்துமஸ், பேச்சி ஆகிய படங்களிலும் கவனத்தைப் பெற்றார். தற்போது, லிங்கேஷுடன் சேர்ந்து ‘காயல்’ எனும் படத்தில் நடித்துள்ளார்.
ஜே ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமயந்தி எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் லிங்கேஷ் உடன் அனுமோல், ரமேஷ் திலக், ஸ்வாகத கிருஷ்ணன், ஐசக் வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 12 ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், காயல் படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.