காந்தாரா சாப்டர் 1: டப்பிங் பணிகளை முடித்த ருக்மணி வசந்த்!

ஐதராபாத்,
ரிஷப் ஷெட்டி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘ காந்தாரா: சாப்டர் 1’ என பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹொம்பாலே பில்ம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் 7 இந்திய மொழிகளில் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை தான் முடித்து விட்டதாக நடிகை ருக்மணி வசந்த் இன்ஸ்டா ஸ்டோரியின் மூலம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் கனகவதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.