’காந்தாரா சாப்டர் 1’-ஐப் பார்த்து பிரமித்துப் போன இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்|Indian star cricketer blown away by Kantara Chapter 1

சென்னை,
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறது. இப்படம் இதுவரை ரூ.330 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. பல பிரபலங்களை கவர்ந்த இத்திரைப்படம் இப்போது இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கே.எல். ராகுலின் இதயத்தை வென்றுள்ளது.
கே.எல். ராகுல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாராட்டை தெரிவித்தார். அதில், “இப்போதுதான் காந்தாராவைப் பார்த்தேன். ரிஷப் ஷெட்டியின் மாயாஜாலத்தால் பிரமித்துப் போனேன். மங்களூரு மக்களையும் நம்பிக்கையையும் அழகாக பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்” இவ்வாறு தெரிவித்தார்.கே.எல். ராகுலின் பாராட்டை ரிஷப் ஷெட்டி மீண்டும் பகிர்ந்து, பாராட்டுக்கு நன்றி தெரிவித்தார்.
காந்தாரா: சாப்டர் 1 படம் ரூ. 400 கோடி வசூலை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ருக்மிணி வசந்த் மற்றும் குல்ஷன் தேவையா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.