காந்தாரா சாப்டர் 1: “என்ன ஒரு அற்புதமான படம்”-அல்லு அர்ஜுன் பாராட்டு | Kandhara Chapter 1: “What a wonderful film”

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா சாப்டர் 1” படம் கடந்த 2ம் தேதி உலகளவில் வெளியானது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். பழங்குடிகள் – மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து, பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.
இந்தநிலையில், “காந்தாரா சாப்டர் 1” படத்தை பாராட்டி நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நேற்று இரவு காந்தாரா பார்த்தேன். ஆஹா, என்ன ஒரு அற்புதமான படம். அதைப் பார்த்து நான் மயக்கத்தில் இருந்தேன். எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகர் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுகள். அவர் ஒவ்வொரு செயல்களிலும் சிறந்து விளங்கினார்.
ருக்மிணி, ஜெயராம், குல்ஷாந்தேவய்யா மற்றும் அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. அஜனேஷின் இசை, அரவிந்த் எஸ்.கஷ்யப்வின் ஒளிப்பதிவு, தரணிகங்கேவின் கலை இயக்கம், மற்றும் அர்ஜுன்ராஜின் சண்டைக்காட்சிகள் என தொழில்நுட்ப வல்லுநர்களின் படைப்பு அற்புதமாக இருந்தது.
தயாரிப்பாளர் மற்றும் முழு ஹோம்பலே பிலிம்ஸ் குழுவிற்கும் வாழ்த்துகள். உண்மையைச் சொன்னால், அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது.” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.






