‘காதி’ படத்திற்காக 8 எட்டு கிலோவுக்கு மேல் எடை குறைத்த விக்ரம் பிரபு|Vikram Prabhu lost over 8 kilos for ‘Ghaati’

சென்னை,
இயக்குனர் ஜாகர்லமுடியின் அதிரடி ஆக்சன் படமான ‘காதி’யில் அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்து நடிக்கும் நடிகர் விக்ரம் பிரபு, தனது கதாபாத்திரத்திற்காக எட்டு கிலோவுக்கு மேல் எடை குறைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், இயக்குனர் சண்முக பிரியனின் காதல் படமான ‘லவ் மேரேஜ்’ படத்தில் எடை அதிகரிக்க வேண்டியிருந்தது என்றும் கூறினார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விக்ரம் பிரபு, “நான் இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்தேன்.
‘லவ் மேரேஜ்’ படத்தில், நான் குண்டாக இருக்க வேண்டியிருந்தது, அதே நேரத்தில் ‘காதி’ படத்தில், மெலிந்த தோற்றத்தில் இருக்க வேண்டியிருந்தது. இதனால், காதி படத்திற்காக 8 கிலோவுக்கு மேல் எடை குறைத்தேன்” என்றார்.
விக்ரம் பிரபு காதி படத்தில் தேசி ராஜு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் காதி திரைப்படம் வருகிற 11-ம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது.