’காதல் முறிவால் யாருக்கு அதிக வலி?’ – ராஷ்மிகா சொன்ன பதில்

சென்னை,
ரஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்திய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உள்ளார். சமீபத்தில், புஷ்பா 2 மற்றும் சாவா திரைப்படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றிகளை பெற்ற இவர் இப்போது பெரிய ஹீரோக்களுடன் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுடன் இந்தியிலும் தனது பலத்தைக் காட்டி வருகிறார்.
தற்போது இந்தியில் தம்மா என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆதித்யா சர்போத்தர் இயக்கி உள்ள இந்த ஹாரர் காமெடி திரில்லர் படம் நேற்று திரைக்கு வந்தது.
மேலும், ராஷ்மிகா ‘தி கேர்ள்பிரெண்ட் ’என்ற படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில், அந்த படத்தின் புரமோஷனின்போது ராஷ்மிகா காதல் முறிவு குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்தார். ஒரு நேர்காணலில், ராஷ்மிகா பிரிந்ததைப் பற்றி பேசினார்.
காதல் முறிவால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று ராஷ்மிகா மந்தனா கூறினார். அவர் கூறுகையில், ‘காதல் முறிவால் பெண்களை விட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எங்கள் வலியை வெளிப்படுத்த உங்களைப் போல தாடி வளர்க்க முடியாது. மது குடிக்க முடியாது. பெண்கள் உள்ளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதை வெளியே காட்ட முடியாது’ என்றார். இந்தக் கருத்துக்கள் இப்போது வைரலாகி வருகின்றன.