காதல் தோல்வியால் கதறி அழுதேன் – அனன்யா நாகல்லா

காதல் தோல்வியால் கதறி அழுதேன் – அனன்யா நாகல்லா


தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனன்யா நாகல்லா. ‘வக்கீல் சாப்’ என்ற படத்தில் திவ்யா நாயக் என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

சினிமா மட்டுமின்றி இளைஞர்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணலில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அளித்த பேட்டியில், ‘சினிமாவில் நான் அறிமுகமான கால கட்டத்தில் ஒருவருடன் காதலில் விழுந்தேன். ஆனால் அந்த காதலில் எதிர்பாராமல் முறிவு ஏற்பட்டது. இதனால் கடும் மனவேதனை அடைந்தேன்.

மன அழுத்தம் காரணமாக என் மனம், மூளை என எதுவும் தொடர்பில்லாமல் போய் விட்டது. சில நேரங்களில் தாங்க முடியாமல் காதலித்தவரை தொடர்பு கொள்வேன். இவ்வளவு நடந்த பிறகும் ஏன் அவரை அழைக்கிறேன் என எனக்கே புரியவில்லை. இரவு முழுவதும் அழுவேன். காலையில் உடற்பயிற்சி செய்வேன். படப்பிடிப்பில் கேரவனில் அழுதேன். கண்களைத் துடைத்து விட்டு வெளியே வந்து கேமரா முன்பு நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *