காதலித்து பணமோசடி… நடிகை மீது இளைஞர் புகார்|Money laundering… Youth complains against actress

சென்னை,
குங்பு வகுப்பில் பழகிய துணை நடிகை பணமோசடி செய்துவிட்டதாக ஐ.டி. ஊழியர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த கவுரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரீஸ், தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தான் தற்காப்பு கலையான குங்பு பயிற்சிக்கு செல்லும்போது சின்னத்திரை நடிகையான அனாமிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாக கூறினார்.
தொடக்கத்தில் தனக்கு கடன் பிரச்சினை இருப்பதாகவும் அதை சரி செய்தால்தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என கூறியதை நம்பி கேட்கும்போதெல்லாம் அனாமிகாவிற்கு பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் அனாமிகா அதிகமாக பணம் கேட்க தொடங்கியதாகவும், தான் முடியாது என கூற, சண்டைபோட்டுவிட்டு, பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறினார்.
இதுவரை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிய அனாமிகா,மாங்காடு காவல் நிலையத்தில் பணமே வாங்கவில்லை என நாடகமாடியதாக ஹரீஸ் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
தனியார் டிவி சீரியலில் நடித்து வரும் அனாமிகா, யோகிபாபுவின் படத்தில் நடிக்க இருப்பதாக சுட்டிக்காட்டிய ஹரீஸ், தன்னுடைய பணத்தை மீட்டு தருவதோடு, அனாமிகாவிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபியிடம் முறையிட்டதாக தெரிவித்தார்.