காதலரை கரம் பிடித்த "நாடோடிகள்" பட நடிகை

காதலரை கரம் பிடித்த "நாடோடிகள்" பட நடிகை


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் அபிநயா. வாய் பேச முடியாத இவர் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஈசன், குற்றம் 23, ஏழாம் அறிவு, வீரம், தனி ஒருவன், தாக்க தாக்க, அடிடா மேளம், குற்றம் 23, நிசப்தம், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகை நயன்தாரா, இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்துவரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘பணி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். அதிக மொழிகளில் நடித்த நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரராகவும் திகழ்ந்து வருகிறார் அபிநயா.

இவரைப் பற்றிய காதல் கிசுகிசு அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி வந்த நிலையில், கடந்த ஆண்டு தான் ஏற்கனவே 15 வருடமாக ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தன்னை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என தெரிவித்தார். தன்னுடைய பள்ளி நண்பரான வெகேசன கார்த்திக் என்பவருடன் தான் அபிநயா கடந்த ரிலேஷன்ஷிப் இருந்து வந்ததை நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்தார்.

கடந்த 9-ந் தேதி இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் அபிநயாவுக்கும் இவருடைய காதலருக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அபிநயாவின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by M.g Abhinaya (@abhinaya_official)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *