”காஞ்சனா 4” – வெளியான ராகவா லாரன்ஸின் ஹாரர் திரில்லர் பட அப்டேட்|Kanchana 4: Massive update about Raghava Lawrence’s horror thriller is here

சென்னை,
”காஞ்சனா” திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான ஹாரர் படங்களில் ஒன்று காஞ்சனா. இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் உள்ளனர்.
கடைசியாக வெளியான காஞ்சனா 3 , கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் பாக்ஸ் ஆபீஸில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.
தற்போது நான்காவது பாகம் உருவாகி வருகிறது. இதில் பாலிவுட் நடிகை நோரா பதேஹி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்திருப்பதாக தெரிகிறது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.