காசியில் ரிஷப் ஷெட்டி சிறப்பு பூஜை…வைரலாகும் வீடியோ

சென்னை,
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியுள்ள படம் காந்தாரா: சாப்டர்1. இதில் ருக்மிணி வசந்த், பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்தப் படம் வெறும் 16 நாட்களில் ரூ. 717 கோடி வசூலித்துள்ளது. இதனால், கன்னடத் திரையுலகில் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக இது மாறியுள்ளது. கேஜிஎப்-2 முதல் இடத்தில் உள்ளது.
இப்போது வார இறுதி மற்றும் தீபாவளி விடுமுறைகள் வந்துவிட்டதால், ‘காந்தாரா: சாப்டர்1’ வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தாரா சாப்டர் 1 பிளாக்பஸ்டராக மாறியுள்ளநிலையில், ரிஷப் ஷெட்டி காசிக்கு சென்றிருக்கிறார். அங்கு, அவர் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.