''காக்டெய்ல் 2'': ராஷ்மிகா, கீர்த்தியின் வீடியோ கசிவு – வைரல்

சென்னை,
காக்டெய்ல் 2 படத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வைரலான இந்த கிளிப்பில் ஷாஹித் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோர் அருகருகே நடந்து செல்வது இடம்பெற்றுள்ளது.
இது ரசிகர்களிடையே உற்சாகத்தைத் தூண்டியுள்ளது. இதனையடுத்து, படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் ஹாரர் படமான தம்மாவில் நடித்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.