கவினின் அடுத்த படம் – வெளியான முக்கிய அப்டேட்|Kavin to do his next film with Prince Pictures

சென்னை,
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான கவினின் அடுத்த படம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அவரது அடுத்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய கவினுக்கு வாழ்த்து கூறிய அந்நிறுவனம், இந்த வருடம் ஒன்றாக இணைந்து கொண்டாடுவோம் என்று தெரிவித்தது. இதன் மூலம் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கவினின் அடுத்த படத்தை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘லிப்ட், டாடா, ஸ்டார்’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அதனை தொடர்ந்து, தற்போது, கவின் பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அயோத்தி பட நாயகி பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.