கவர்ச்சி காட்டுவது ஒன்றும் தவறில்லை..” – நடிகை மடோனா செபாஸ்டியன் | “There’s nothing wrong with being sexy.

கவர்ச்சி காட்டுவது ஒன்றும் தவறில்லை..” – நடிகை மடோனா செபாஸ்டியன் | “There’s nothing wrong with being sexy.


சென்னை,

‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, ‘ஜூங்கா’, ‘லியோ’, ‘ஜாலியோ ஜிம்கானா’ உள்ளிட்ட படங்களில் நடித்த மடோனா செபாஸ்டியன், தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார். வளர்ந்து வரும் நடிகையான மடோனா செபாஸ்டியன், குறைவான அளவிலேயே படங்கள் நடித்து வருகிறார். குறிப்பாக இந்த ஆண்டில் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை அவர் சமீபகாலமாக களமிறக்கி கவனம் ஈர்த்து வருகிறார். இது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஆனாலும், ‘‘கவர்ச்சி காட்டுவது ஒன்றும் தவறில்லையே. அதுவும் ஒருவகை பரிமாணம்தான். கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் வித்தியாசம் தெரிந்தால் போதும். இதில் விமர்சிக்க எதுவுமில்லையே…” என்கிறார் மடோனா செபாஸ்டியன். ‘கவர்ச்சியாக நடிக்க தயார்’ என்பதற்கு, அவர் விடும் தூதுதான் கவர்ச்சி படங்கள் என்று திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *