கவனத்தை ஈர்க்கும் ’ஹரி ஹர வீரமல்லு’-ன் ’தார தார’ பாடல்|Taara Taara song impresses with Nidhhi Agerwal’s dazzling dance moves and soothing music

சென்னை,
“ஹரி ஹர வீரமல்லு” படத்தின் 4-வது பாடல் ‘தார தார’ வெளியாகி இருக்கிறது.
பவன் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கீரவாணி இசை அமைத்திருக்கும் இப்படம் ஜூன் 12ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானநிலையில், தற்போது 4-வது பாடல் வெளியாகி இருக்கிறது. ‘தார தார’ என தொடங்கும் இப்பாடலை லிப்சிகா பாஷ்யம், ஆதித்யா ஐயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர். நிதி அகர்வால் நடனமாடியுள்ள இப்பாடல் இணையத்தில் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது.