கழுத்தில் மஞ்சள் கயிறு…”கோர்ட்” பட நடிகைக்கு திருமணமா?…வைரலாகும் வீடியோ|‘Court’ Heroine’s Yellow Thread Sparks Marriage Rumours

சென்னை,
நானியின் ‘கோர்ட்’ படம் இந்த வருடத்தின் வெற்றிப் படங்களில் ஒன்றாகும். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றி ஸ்ரீதேவிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது. தற்போது அவர் தமிழில் ஒன்றிலும் தெலுங்கில் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
தனது நடிப்புக்காக கவனம் ஈர்த்த ஸ்ரீதேவி தற்போது மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார். ஆனால், நடிப்புக்காக அல்ல. ஸ்ரீதேவி சமீபத்தில் ரக்சா பந்தன் பண்டிகையைக் கொண்டாடினார். அவர் தனது சகோதரரின் கையில் ராக்கி கட்டி, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இந்த வீடியோவில், அவர் கழுத்தில் அணிந்திருந்த மஞ்சள் கயிறு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதா? அது எப்போது நடந்தது? என பல வதந்திகளை பரப்ப ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அவருக்கு திருமணம் நடக்கவில்லை.
ராக்கி பண்டிகை கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதற்கு முந்தைய நாள், ஸ்ரீதேவி தனது வீட்டில் வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டார், இது புனித ஷ்ரவண மாதத்தில் பல பெண்கள் கடைப்பிடிக்கும் ஒரு சடங்காகும்.
இந்த பூஜைக்குப் பிறகு, அவர் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் கட்டப்பட்ட நாணயத்தை அணிந்திருந்தார். அதை தாலி என்று தவறாகக் கருதிய நெட்டிசன்கள் அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதா? என்று கருத்து தெரிவித்துள்ளனர்.