கல்யாணி பிரியதர்ஷனின் “லோகா” படத்தின் டிரெய்லர் வெளியீடு

கல்யாணி பிரியதர்ஷனின் “லோகா” படத்தின் டிரெய்லர் வெளியீடு


துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் அடுத்த படத்தை வெளியிட தயாராகி இருக்கிறார். இப்படத்திற்கு ‘லோகா’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இது துல்கர் சல்மானின் வேபேரர் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி வருகிறது. துல்கர் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 28 ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்தநிலையில், நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‘லோகா’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *