கல்யாணம் பண்ணிக்கோங்க….மெசேஜ் அனுப்பிய 17 வயது சிறுவன்

சென்னை,
சில ரசிகர்கள் பிரபலங்களிடம் செல்பி எடுப்பதோடு நிற்பதில்லை. கல்யாணம் பண்ணிக்க சொல்லி பலர் புரொபோஸ் செய்கிறார்கள். சமீபத்தில் மலையாள ஹீரோயின் அவந்திகா மோகனுக்கும் இப்படிப்பட்ட புரொபோசல் வந்திருக்கிறது. ஆனால் அந்த பையனுக்கு 17 வயதுதான் ஆகிறது.
தற்போது அவந்திகா அதற்கு பதிலளித்திருக்கிறார். அவர் கூறிகையில், ”சிறிது காலமாக எனக்கு செய்தி அனுப்பி வரும் ஒரு இளம் ரசிகரிடம் நான் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு 16 அல்லது 17 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்க்கை என்றால் என்னவென்று உங்களுக்கு இன்னும் தெரியவில்லை.
ஒரு வருடமாக இப்படி மெசேஜ் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் இன்னும் ஒரு குழந்தைதான். படிப்பை பற்றி சிந்திக்க வேண்டிய வயதில் நீங்கள் இருக்கிறீர்கள். நான் உன்னை விட வயதில் ரொம்ப மூத்தவர். நாம் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாரும் என்னை உன் மனைவியா நினைக்க மாட்டாங்க, உன் அம்மான்னு நினைப்பாங்க. சரியான நேரம் வரும்போது, உன் வாழ்க்கையிலும் ஒரு காதல் கதை தொடங்கும்’’ என்றார்.
அவந்திகா, யக்சி- பெய்த்புல்லி யுவர்ஸ், காரா, ஆலமரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.படங்களுடன் பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் 2017-ல், அனில் குமாரை மணந்தார். அவர்களுக்கு ருத்ரான்ஷ் என்ற மகன் உள்ளார்.