கல்கி 2-ல் இருந்து வெளியேறிய பின்…ஷாருக்கானின் ”கிங்” படத்தில் இணைந்த தீபிகா படுகோன் |Deepika Padukone Joins Shah Rukh Khan For ‘King’ After Exiting Kalki 2898 AD Sequel

கல்கி 2-ல் இருந்து வெளியேறிய பின்…ஷாருக்கானின் ”கிங்” படத்தில் இணைந்த தீபிகா படுகோன் |Deepika Padukone Joins Shah Rukh Khan For ‘King’ After Exiting Kalki 2898 AD Sequel


மும்பை,

”அனிமல்” இயக்குனரின் ”ஸ்பிரிட்” படத்தில் இருந்து முன்னதாக விலகிய தீபிகா படுகோன், சமீபத்தில் கல்கி 2-ல் இருந்தும் வெளியேறினார். இதனால் அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்த சர்ச்சைக்கு மத்தியில், நடிகை தீபிகா படுகோன், ஷாருக்கானின் கிங் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில்,

”கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு ”ஓம் சாந்தி ஓம்” படப்பிடிப்பின் போது அவர் (ஷாருக்கான்) எனக்குக் கற்றுக் கொடுத்த முதல் பாடம் என்னவென்றால், ஒரு திரைப்படத்தால் நமக்கு கிடைக்கும் அனுபவமும், அதில் நீங்கள் யாருடன் நடிக்கிறீர்கள் என்பதும் அதன் வெற்றியை விட மிக முக்கியமானது என்பதுதான்.

நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் அதை பயன்படுத்தியிருக்கிறேன். அதனால்தான் நாங்கள் மீண்டும் எங்கள் 6வது படத்தை ஒன்றாக உருவாக்குகிறோம்?” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

சித்தார்த் ஆனந்த் இயக்கும் கிங் படத்தில் , ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிக்கிறார். ரெட் சில்லிஸ் மற்றும் மார்பிலிக்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *