கர்நாடக அரசின் திரைப்பட விழாவில் 4 விருதுகளை வென்ற “777 சார்லி” படம்

கிரண்ராஜ் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் “777 சார்லி”. இந்த படத்தில் ரக்ஷித் ஷெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சங்கீதா சிருங்கேரி, ராஜ்பி ஷெட்டி, பாபி சிம்ஹா ஆகியோரும் நடித்துள்ளனர்.
கன்னட மொழியில் தயாரிக்கப்பட்ட இப்படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு மனிதனுக்கும், நாய்க்கும் இடையேயான பாசத்தை கதைக்கருவாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக அரசின் 2021ம் ஆண்டிற்கான திரைப்பட விருது வழங்கும் விழாவில் “777 சார்லி” படம் 4 விருதுகளை வென்றுள்ளது. அதாவது, இப்படம் சிறந்த நடிகர், 2வது சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பாடலாசிரியர் ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.