”கரூர் பெருந்துயரம் நெஞ்சை அடைக்கிறது” – மாரி செல்வராஜ்|”The tragedy of Karur is heartbreaking”

”கரூர் பெருந்துயரம் நெஞ்சை அடைக்கிறது” – மாரி செல்வராஜ்|”The tragedy of Karur is heartbreaking”


சென்னை,

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”கரூர் பெருந்துயரம் நெஞ்சை அடைக்கிறது. கண்ணீர் முட்டுகிறது” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *