“கருப்பு” படத்தின் ஓடிடி உரிமம் அதிக விலைக்கு விற்பனை

“கருப்பு” படத்தின் ஓடிடி உரிமம் அதிக விலைக்கு விற்பனை


சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது. ‘கருப்பு’ திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சாட்டிலைட் உரிமத்தை ஜீ5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *