‘கம்பி கட்ன கதை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை,
விஜய் நடிப்பில் வெற்றிப்பெற்ற ‘யூத்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பிறகு நடிகராக வலம் வருபவர் நடிகர் நட்டி என்னும் நட்ராஜ். இவர் ‘கர்ணன்’, ‘மகாராஜா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இவர், அறிமுக இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் ‘கம்பி கட்ன கதை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிங்கம்புலி, மனோபாலா, கராத்தே கார்த்தி, முத்துராமன், சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இந்த படம் சதுரங்கவேட்டை பட பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்து , பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதன்படி, வருகிற அக்டோபர் 17ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.