கமல்ஹாசனின் ’நாயகன்’ முதல் ரஜினிகாந்தின் ’தளபதி’ வரை: இளையராஜா

சென்னை,
மணிரத்னமும் இளையராஜாவும் சினிமா உலகில் இரண்டு மிகப்பெரிய மேதைகள். இன்று ஒரே நாளில் பிறந்தநாளை கொண்டாடும் இவர்கள் கூட்டணியில் பல பிளாக்பஸ்டர் படங்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில், மணிரத்னம் இயக்குனராகவும் இளையராஜா இசையமைப்பாளராகவும் ஒன்றாக பணிபுரிந்த 10 படங்களை தற்போது காண்போம்
1. பல்லவி அனு பல்லவி
அனில் கபூர், லட்சுமி, கிரண் வைராலே, சுந்தர் ராஜ், விக்ரம் மகந்தர் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் மூல்ம் மணிரத்னம் சாண்டல்வுட்டில் இயக்குனராக அறிமுகமானார். இளையராஜா இசையமைப்பாளராக இருந்த இந்தப் படம் 1983-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி வெளியானது.
2. உனரூ
மோகன்லால், சுகுமாரன், ரதீஷ், உன்னி மேரி, சபிதா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் மணிரத்னம்-இளையராஜா கூட்டணியில் உருவான மற்றொரு படம். இப்படம் 1984-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது.
3. கீதாஞ்சலி
நாகார்ஜுனா அக்கினேனி, கிரிஜா, விஜயகுமார், விஜயசந்தர், சுமித்ரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. 1989-ம் ஆண்டு மே 12-ம் தேதி வெளியான இப்படம் ஒரு தேசிய திரைப்பட விருதையும் ஆறு மாநில நந்தி விருதுகளையும் வென்றது.
4.பகல் நிலவு
முரளி, ரேவதி, சத்யராஜ், கவுண்டமணி, சரத் பாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் 1985-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி வெளியான இப்படம் இசைக்காக பரவலான பாராட்டைப் பெற்றது.
5. இதய கோவில்
மோகன், ராதா, அம்பிகா, கவுண்டமணி, தியாகு, இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் 1985-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் சற்று மோசமாக இருந்தாலும் பாடல்களும் ஒலிப்பதிவும் இப்படத்திற்கு அடையாளமாக மாறியது.
6. மௌன ராகம்
மோகன், ரேவதி, கார்த்திக், சோனியா, வாணி, வி.கே. ராமசாமி உள்ளிட்டோர் நடிப்பில் 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது.
7. நாயகன்
கமல்ஹாசன், சரண்யா, எம்.வி. வாசுதேவ ராவ், ஜனகராஜ், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் 1987-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி வெளியான இப்படம் மணிரத்னம் கமல்ஹாசனுடன் முதன்முதலில் பணியாற்றிய படமாகும். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
8. அக்னி நட்சத்திரம்
பிரபு, கார்த்திக், அமலா, ஜெயசித்ரா, நிரோஷா, தாரா உள்ளிட்டோர் நடிப்பில் 1988-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி இப்படம் வெளியானது.
9. அஞ்சலி
ரகுவரன், ரேவதி, பிரபு, ஜனகராஜ், சரண்யா, நிஷாந்தி உள்ளிட்டோர் நடிப்பில் 1990-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது மட்டுமில்லாமல் மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.
10. தளபதி
ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சுவாமி, ஜெய்சங்கர், அம்ரிஷ் பூரி உள்ளிட்டோர் நடிப்பில் 1991-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி வெளியான இப்படம் மணிரத்னம் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவான கடைசி படமாகும்.