”கமலுடன் இணைந்து நடிக்க ஆசை, ஆனால்”… – நடிகர் ரஜினிகாந்த்|”I would like to act with Kamal, but”…

சென்னை,
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ள படம் பற்றிய அப்டேட்டை தெரிவித்தார். அவர் கூறுகையில்,
”அடுத்து ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் (தயாரிப்பு நிறுவனம்) இரண்டிற்கும் சேர்த்து ஒரு படம் பண்ண போகிறேன். இன்னும் இயக்குனர் முடிவாகவில்லை. கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை. அதற்கு சரியான கதை , கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். அது கிடைத்தால் நடிப்போம்” என்றார்.
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஈடுபட்டுவருகிறார். இப்படத்தையடுத்து அவர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைய உள்ளதாகவும் அதில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஒரு விழாவில் கமல்ஹாசன் இதனை உறுதிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.