'கபாலி' நடிகையின் 'சிஸ்டர் மிட்நைட்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

'கபாலி' நடிகையின் 'சிஸ்டர் மிட்நைட்' ரிலீஸ் தேதி அறிவிப்பு


சென்னை,

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். இவர் தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த ‘தோனி’ படத்தின் மூலம் அறிமுகமானார். “ரத்த சரித்தரம், ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், ‘கபாலி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சிஸ்டர் மிட்நைட்’. கரண் கந்தாரி இயக்கிய இப்படத்தை அலாஸ்டர் கிளார்க் மற்றும் அன்னா கிரிபின் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இதில், அசோக் பதக், சாயா கடம் மற்றும் ஸ்மிதா தம்பே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பால் பேங்க்ஸ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதன்படி, இப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

View this post on Instagram

A post shared by Karan Kandhari (@deathpunkbaby)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *