கனமழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலுக்கு நடிகை பிரித்தி ஜிந்தா நிதியுதவி

கனமழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலுக்கு நடிகை பிரித்தி ஜிந்தா நிதியுதவி


சிம்லா,

வட இந்தியாவில் கடந்த பல வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், டெல்லி என கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத கொட்டி வரும் கனமழையால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டது. இமாசல பிரதேசத்தில், நடப்பு ஆண்டில் பரவலாக பல்வேறு இடங்களிலும் முன்பே தென்மேற்கு பருவமழை பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்தது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேகவெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளானது. அம்மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. கடந்த 3 மாதத்தில் 203 பேர் மழை தொடர்பான பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தனர். 163 பேர் சாலை விபத்துகளில் சிக்கி பலியானார்கள். அரசு சொத்துகளில் ரூ.4,006 கோடி மற்றும் தனியார் சொத்துகளில் ரூ.67 கோடியும் பாதிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் ரூ.4,079 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் விமானம் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் சமீபத்தில் அறிவித்தார்.

பாலிவுட் நடிகை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா ரூ 30 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். சிம்லா மாவட்டத்தை சேர்ந்த நடிகை பிரீத்தி ஜிந்தா, தனது சொந்த மாநிலத்தின் மீதான பற்றால் சகோதரருடன் இணைந்து நிவாரண முயற்சிகளில் பங்கேற்று வருகிறார்.

View this post on Instagram

A post shared by Punjab Kings (@punjabkingsipl)

பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா. இவர் மணிரத்னம் இயக்கிய “தில் சே” படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தில் சே படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவராக இருக்கிறார். பிரீத்தி ஜிந்தா கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட்எனப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *