கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்

கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்


தமிழில் பாக்யராஜ் இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் ஊர்வசி. தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.இதுவரை 700 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். ஊர்வசி பிரபல கதாநாயகியாக வலம் வந்தபோது மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் இருக்கிறார். இவர் தாய், தந்தை இருவருடனும் மாறிமாறி வசித்து வருகிறார். விவாகரத்துக்கு பிறகு ஊர்வசி இன்னொரு திருமணம் செய்து கொண்டார். தற்போது ஊர்வசிக்கு 50 வயதாகும் நிலையில் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் வெளியான ஜே பேபி, உல்ழொலுக்கு, ஹெர் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

 ஊர்வசி மற்றும் மனோஜ் கே ஜெயன் தம்பதிக்கு பிறந்தவர் தேஜலட்சுமி. தற்பொழுது தேஜலட்சுமி மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்திற்கு `சுந்தரியாயவல் ஸ்டெல்லா’ என்ற தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை ஐகே கே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க. அறிமுக இயக்குநரான பினு பீட்டர் இயக்குகிறார். படத்தின் நாயகனாக சர்ஜனோ காலித் நடிகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவை அனீஷ் மேற்கொள்ள இசையை ஸ்ரீனாத் சிவசங்கரன் இசையமைக்கிறார். படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Manoj K Jayan (@manojkjayan)

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *