“கண்ணால் காண்பது பொய்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கண்ணால் காண்பது பொய்’எனும் திரைப்படத்தில் கார்த்திக், காயத்ரி ரீமா, ஆராத்யா, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே. கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி கே இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தத்தாத்ரே ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவராஜ் பன்னீர்செல்வம் மற்றும் ஏ. தமிழ்செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகர் கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கண்ணால் காண்பது பொய்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கார்த்திக் கையில் ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.