’கண்ணப்பா’: மோகன்லால் பிறந்தநாள் – சிறப்பு கிளிம்ப்ஸ் வெளியீடு|’Kannappa’: Mohanlal’s Birthday

’கண்ணப்பா’: மோகன்லால் பிறந்தநாள் – சிறப்பு கிளிம்ப்ஸ் வெளியீடு|’Kannappa’: Mohanlal’s Birthday


சென்னை,

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால், தெலுங்கில் தற்போது ‘கண்ணப்பா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் இப்படத்தை ‘மகாபாரதம்’ தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மோகன்லால், கிராதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற ஜூன் 27-ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இன்று நடிகர் மோகன்லாலின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படக்குழு சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *