'கண்ணப்பா' படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? – நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்

'கண்ணப்பா' படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? – நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்


சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் கண்ணப்பா. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

இதில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய வேடத்திலும் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் சிவனாக நடிக்கின்றார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்சய் குமாரும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

வரும் ஏப்ரல் 25-ம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் நிகழ்ச்சி நேற்று சென்னை நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

நடிகர் விஷ்ணு மஞ்சு பேசுகையில், ” 15 வருடங்களுக்கு முன்பு நான் நடிகனாக தொடங்கினேன். அன்று முதல் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இன்று சிவன் அருளால் என் ஆசை நிறைவேறியிருக்கிறது, அதுவும் இந்தக் கண்ணப்பா திரைப்படம் மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது.15 வருடங்களுக்கு முன்பு இருந்தே சரத்குமார் அங்கிளுடன் படம் பண்ண வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன், இப்போது அது நடந்திருக்கிறது. என் அப்பா மீது உள்ள மரியாதை காரணமாகத்தான் அவர் இந்தப் படத்தில் நடித்தார். படத் தொகுப்பாளர் ஆண்டனி, ‘காக்க காக்க’ படம் பார்த்தது முதல் அவருடைய ரசிகனாகி விட்டேன். நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தியை நாங்கள் தான் அறிமுகப்படுத்த இருந்தோம், ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அறிமுகமாகிவிட்டார். அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். நிச்சயம் பெரிய நடிகையாக வருவார். கண்ணப்பா பற்றி அனைவருக்கும் தெரிந்ததுதான். ‘கண்ணப்பா’ ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகிறது ” என்றார்.

“கண்ணப்பா கதையை நியூசிலாந்தில் படமாக்க காரணம் என்ன?” என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு மஞ்சு, “இந்தக் கேள்வியை நிறைய பேர் கேட்கிறார்கள். கண்ணப்பா கதை 3-வது நூற்றாண்டில் நடக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் நீர், காற்று, வனம் என அனைத்தும் எவ்வளவு பசுமையாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள். கண்ணப்பா கதையை என்னிடம் கொடுத்தவருக்கு தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போய்விட்டது. அதனால், நான் அந்த கதையை விரிவுப்படுத்தி எழுதியதோடு, படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்ய தொடங்கி விட்டேன்.

உலகின் பல நாடுகளுக்கு சென்று பார்த்தபோது, நியூசிலாந்து நாடுதான் சரியான இடமாக இருந்தது. கடவுள் வரைந்த கடைசி ஓவியம் என்றால் அது நியூசிலாந்துதான். நம் நாடும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்திருக்கும், ஆனால் நாம் அதை இப்போது கெடுத்து விட்டோம். கண்ணப்பா படத்தின் கதை அப்படி ஒரு இடத்தில் நடக்க வேண்டும் என்று விரும்பினேன், அதனால்தான் அங்கு படப்பிடிப்பு நடத்தினேன். படத்தில் நீங்கள் பார்க்கும்போது கிராபிக்ஸ் என்று நினைப்பீர்கள், ஆனால் உண்மையில் படத்தில் இடம் பெறும் லொக்கேஷன்கள் அனைத்தும் லைவானவை… அந்த அளவுக்கு நீர், வனம் என அனைத்தும் மிக அழகாக இருக்கும்.” என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *