கணவரை பிரிகிறேனா?…வதந்திக்கு நடிகை சங்கீதா பதில்|Sangeetha Krish refutes rumours of her divorce

சென்னை,
நடிகை சங்கீதா, தனது கணவரும் பாடகருமான கிரிஷ்ஷை விவாகரத்து செய்ய உள்ளதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டநிலையில், அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்
கடந்த 2009-ம் ஆண்டு சங்கீதா- கிரிஷ் திருமணம் திருவண்ணாமலை கோவிலில் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
இதற்கிடையில், சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சங்கீதா, இன்ஸ்டாகிராமில் “சங்கீதா கிரிஷ்” என்று பெயர் வைத்திருந்தார். தற்போது அதனை ”சங்கீதா சந்தரம்”என்று மாற்றியிருக்கிறார். நடிகைகள் பலர் விவாகரத்திற்கு முன்பு கணவரின் பெயரை நீக்கி இருக்கும் நிலையில், சங்கீதாவும் கணவர் கிரிஷ்ஷை பிரிகிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு நடிகை சங்கீதா பதிலளித்துள்ளார். அதன்படி, சமூக ஊடகங்களில் கணவரை பிரிய போவதாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் நியூமராலஜிக்காக பெயரை மாற்றியதாகவும் அவர் கூறினார்.